தமிழ்நாடு

1000, 1500, 2000 மற்றும் 3000: இல்லத்தரசிகளின் காட்டில் மழை!

Published

on

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என முதல் முதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய நிலையில் அதனை காப்பி அடித்து இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் என திமுகவும் 1500 ரூபாய் என அதிமுகவும் மாறி மாறி வாக்குறுதிகள் அளித்தன.

அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார். அதுமட்டுமின்றி அசாம் மாநிலத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இல்லத்தரசிகளுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் பணம் வரப்போவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் நீதி மய்யம் எனது வாக்குறுதியாக படித்த மகளிருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஓய்வு நேரத்தில் குறைந்தது ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்க வழி செய்யப்படும் என்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version