செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு ரூ.1000 கிடைக்குமா? அரசு திட்டம் பற்றி முக்கிய தகவல்!

மகளிர் உரிமைத் தொகை – புதிதாக ரூ.1000 பெறப்போகும் மகளிர் எண்ணிக்கை குறித்த தகவல்
தமிழ்நாடு அரசு நடாத்தும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் நலத் திட்டமாகும். இதன் விரிவாக்கத்தின் போது, புதிதாக விண்ணப்பித்த மகளிரில் பலருக்கும் சந்தேகம் – “எனக்கும் இந்த தொகை கிடைக்குமா?“
இந்த திட்டத்திற்கு ஜூலை 15ஆம் தேதி முதல் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமுகள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திட்டத்திலிருந்து விலக்கப்பட்ட மகளிர் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஆனால், எல்லோரும் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்பதற்கான உறுதி இல்லை. அரசு விரைவில் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்யும். இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது:
“தற்போது அரசுக்கு இருக்கும் நிதி அடிப்படையில், புதியதாக வெறும் 5,833 பேருக்கு மட்டுமே ரூ.1000 வழங்க முடியும். அனைவரையும் சேர்க்க அரசு நிதி போதாது.”
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசு மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வழங்கும் வகையில், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளை சேர்க்கலாம் என்பதும் ஒரு சாத்தியமான விஷயமாக கூறப்படுகிறது.
புதிய பயனாளர்களுக்கு திட்டத் தொகை எப்போது?
இப்போது விண்ணப்பிக்கிறவர்கள் ஜனவரி 2026 அல்லது பிப்ரவரி 2026 மாதங்களில் தொகையை பெறும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.















