விமர்சனம்
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைவிமர்சனம்

விஜய்சேதுபதி, நயன்தாரா, சம்ந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் நல்ல எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை தற்போது பார்ப்போம் .
விஜய் சேதுபதி குடும்பத்தில் யாராவது பெண் எடுத்தாலும், பெண் கொடுத்தாலும் அசம்பாவிதம் நடந்து விடும் என்று அந்த ஊரில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதை மீறி விஜய் சேதுபதியின் அப்பா திருமணம் செய்துகொண்ட நிலையில் விஜய்சேதுபதி பிறந்தவுடன் அந்த நம்பிக்கைக்கு தகுந்தவாறு அவர் இறந்துவிடுகிறார்.
இதனால் தன்னுடைய குடும்பத்திற்கு உண்மையிலேயே சாபம் இருக்கிறதோ என்ற அச்சம் அடைந்த விஜய்செதுபதி, அம்மாவை பிரிந்து தனியாக வாழ்கிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நயன்தாராவை ஒரே நேரத்தில் சந்திக்கிறார். இருவரும் விஜய் சேது மீது காதலில் விழுகின்றனர். இருவரையும் அவர் திருமணம் செய்தாரா? அல்லது ஒருவரை ஒதுக்கிவிட்டு ஒருவரை மட்டும் திருமணம் செய்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை.
இப்படி ஒரு கேரக்டரில் மாஸ் நடிகர் விஜய்சேத்பதி நடிப்பதற்கு உண்மையிலேயே துணிச்சல் தான். இரண்டு காதலிகளிடம் சிக்கிக்கொண்டு, மாறி மாறி அடிவாங்கி இருவரிடையும் மாறி மாறி ரொமான்ஸ் செய்யும் கேரக்டரில் விஜய்சேதுபதி அசத்துகிறார். ஒரு நடிகர் அட்டகாசமான வில்லன் மற்றும் அழகான ரொமான்ஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் என்றால் அது விஜய் சேதுபதி ஆக மட்டுமே இருக்கும் .
நயன்தாராவை பொருத்தவரை படம் முழுவதும் சேலையில் வந்தாலும் கிளாமராகவும் உள்ளார். அவரது நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக உள்ளது. சமந்தா மாடர்ன் உடையில் வந்து கிளாமரில் கலக்குகிறார். மொத்தத்தில் இரண்டு நாயகிகளும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் மிகவும் சிறப்பாக விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஆனால் கதையை ஒரு கோர்வையாக நகர்த்தி செல்வதில் அவர் தவறி உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே வெளிவந்த ஒரே ஹீரோவுக்கு இரண்டு காதலிகள் படங்களிலிருந்து வித்தியாசமாக இருந்தாலும் இந்த படத்தை இன்னும் சுவராசியமாக எடுத்து இருக்கலாம் என்று தான் படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.
அனிருத்தின் பாடல்கள் அட்டகாசமாக படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. பின்னணி இசையும் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படத்திற்கு உரிய இசையை அளித்துள்ளார். மொத்தத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நயன்தாரா செய்யும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தினாலும் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது. விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தாவுக்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.