சினிமா செய்திகள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்: ஒரே திரையரங்கில் 3 ஸ்க்ரீன்களில் 4 மணி காட்சி:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன் பதிவுகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் 4 மணி காட்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு திரையரங்குகளில் நான்கு காட்சிக்கான டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்பனை ஆகி விட்டதை அடுத்து தற்போது மூன்றாவது திரையரங்கிலும் 4 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த திரையரங்கில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கின் டிக்கெட்டுகளும் மிகவும் விறுவிறுப்பாக பதிவாகி வருகின்றன .
காத்துவாகுல ரெண்டு காதல் திரைப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது மிக வேகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு ஆனதில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
After 2 screens sell out, third screen now open for #KaathuvaakulaRenduKaadhal FDFS 4AM at #FansFortRohini
This is going to be a grand opening 🔥💥 @VigneshShivN @anirudhofficial @VijaySethuOffl @Samanthaprabhu2 @7screenstudio pic.twitter.com/tfJ7A4inW3
— Rohini SilverScreens (@RohiniSilverScr) April 25, 2022