வணிகம்

ஜூலை மாதம் ரூ.1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

Published

on

ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் கடந்த மாதம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை விட 33 சதவீதம் இது கூடுதல் ஜிஎஸ்டி வசூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 50,283 கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி வசூல், 52,641 கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி ரூபாய்க்குக் குறைவாக மட்டுமே வசூலாகி இருந்தது.

Trending

Exit mobile version