தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி – அரசாணை வெளியீடு

Published

on

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அந்த அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று காலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நகை கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் என்பதும் இதனை அடுத்து மிக விரைவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 6,000 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதற்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அதிகாரப்பூர்வமாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version