இந்தியா

ஜே.ஈ.ஈ அட்வான்ஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?

Published

on

ஜே.ஈ.ஈ அட்வான்ஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ள நிலையில் அந்த ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.டெக் உள்பட இளநிலை பொறியியல் படிப்பு படிப்பதற்கு இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் மெயின் மற்றும் அட்வான்ஸ் என நடத்தப்படும் இந்த தேர்வுகளில் தகுதி பெரும் மாணவர்கள் மட்டுமே தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றவர்கள் என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்பதும் முதல் நிலை தேர்வில் இரண்டரை லட்சம் இடங்களை பிடிப்பவர்கள் ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வு எனக் கூறப்படும் அட்வான்ஸ் தேர்வை எழுதும் தகுதியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வில் தகுதி வரும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்த நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜே.ஈ.ஈ தேர்வு பெறும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது சமீபத்தில் விதிகள் தளத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜே.ஈ.ஈ அட்வான்ஸ்டுதேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஜே.ஈ.ஈ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டால் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஹால் டிக்கெட் இல்லாமல் மாணவர்கள் தேர்வுகள் எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வு என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். அதன் பிறகு சப்மிட் கொடுத்தால் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதை பிரிண்ட் எடுத்து விண்ணப்பதாரர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் தேர்வு எழுத செல்லும் தினத்தில் அதை கண்டிப்பாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version