தமிழ்நாடு

ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Published

on

டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசி சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் அதிகாலையில் திறக்கப்படும் சொர்க்கவாசலை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 3:45 பெருமாள் புறப்பாடு நடக்கும் என்றும் 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சொர்க்க வாசல் தரிசனம் செய்வதற்கு வசதியாக ஜனவரி 2ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version