சினிமா
ஆஸ்கர் யுடியூப் சேனலில் ஜெய்பீம்…தமிழ் சினிமாவுக்கு மணிமகுடம்…..

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். 90களில் விழுப்புரம் அருகே வசித்து இருளர் குடும்பம் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்திய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அமேசான் ஓடிடியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், சினிமா உலகினர், பத்திரிக்கையாளர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இப்படத்தை பாராட்டினர். இந்த படம் பல விருதுகளை பெரும் என பலராலும் கணிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் யுடியூப் சேனலில் இப்படம் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. இப்படத்தின் காட்சிகள் மற்றும் இயக்குனர் ஞானவேலின் விளக்கத்தோடு ஒளிபரப்ப பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் சேனலில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சாதனையை ஜெய்பீம் திரைப்படம் பெற்றுள்ளது.
இதையடுத்து திரையுலகினர் பலரும் ஜெய்பீம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.