இந்தியா

ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தி.. கடந்த 10 ஆண்டுகளில் இப்போது தான் குறைவு..!

Published

on

ஐடி ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகவும் குறைவான சம்பள உயர்வு என்று கூறப்படுவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை நிறுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐடி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு 10%க்கும் குறைவான ஊதிய உயர்வு தான் அளிக்கப்படும் என்றும் இது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வு என்றும் கூறப்படுகிறது.

இது ஐடி ஊழியர்களுக்கு மிக மோசமான செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 10.5 சதவீதம் ஊதிய உயர்வுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 9.1 சதவீதம் தான் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

salary

உலக அளவில் ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கடியில் இருப்பதை காரணம் காட்டி இந்த ஊதிய உயர்வு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகப்படியாக பணியில் அமர்த்தப்பட்டதாக கூறி ஏராளமான பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ள ஐடி நிறுவனங்கள் தற்போது அடுத்த கட்டமாக ஊழியர்களின் ஊதிய குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஐடி மற்றும் ஐடி சேவைகள் போன்ற தொழில்களில் பணியாளர்களை மேம்படுத்த ஒரு வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் உள்ளது என்றும் இருப்பினும் மற்ற தொழில்களில் உள்ள வரையறைகள் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 19 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஐடி பணியாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஐடி ஊழியர்களுக்கு மிகவும் குறைவான ஊதிய உயர்வு மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. இருப்பினும் வருங்காலங்களில் ஐடி துறை ஏற்றத்தில் இருந்தால் அப்போது ஊழியர்களுக்கு ஊதியம் அதிகமாக்கப்படும் என்று ஐடி நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. தற்போதைய நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் வேலைக்கு வைத்திருப்பதே பெரிது என்றும் இதில் ஊதிய உயர்வுக்காக ஊழியர்கள் அதிருப்தி அடைய மாட்டார்கள் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version