தமிழ்நாடு

நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருக்கிறதா? ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்!

Published

on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

#image_title

தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிபா ஆதித்தனார் காலத்தில் நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருந்தது. ஆனால் அந்த கட்சி இன்றைக்கும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் தொடர்ந்து பல இடங்களில் மோதல் நிலவியது. முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வர இருந்த நேரத்திலும் நாம் தமிழர் கட்சி இடையேயான மோதல் காரணமாக பதற்றம் நீடித்தது. தேர்தல் முடியும் வரை நாம் தமிழர் கட்சி திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version