தமிழ்நாடு

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படுமா?

Published

on

நாட்டின் தலைநகரான டெல்லியில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப்பதிவு, ஓட்டுநர் உரிமைக்கான விண்ணப்பம், ரேஷன் பொருட்கள் போன்றவை வீடுதேடி வரும் என்ற புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இதனையடுத்து தமிழகத்திலும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து கொடுக்கப்படுமா என்ற ஆவல் எழுந்தது. இதனையடுத்து உணவுத்துறை அமைச்சட் காமராஜிடம் தமிழகத்திலும் ரேஷன் பொருட்களை வீடி தேடி சென்று வழங்க வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், டெல்லி என்பது சிறிய மாநிலம். இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகம் பெரிய மாநிலம் என்பதால் டெல்லியை போன்று வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது சாத்தியமில்லை என்றார்.

மேலும் பெரிய மாநிலங்களில் பொது விநியோகத் திட்டத்தை இவ்வளவு சிறப்பாக செயல்படுத்துகின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாகத்தான் உள்ளது என அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Trending

Exit mobile version