இந்தியா

வேலை பறிபோனதை பெற்றோரிடம் தெரிவிக்காத ‘மெட்டா’ ஊழியர்: ஏமாற்றுவதாக மனவருத்தம்!

Published

on

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தனக்கு மன வருத்தமாக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதை பார்த்தோம். செலவு குறைப்பு உள்பட ஒருசில காரணங்களால் இந்த வேலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘மெட்டா’ நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ‘மெட்டா’ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த திவாரி என்பவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் என்ன காரணத்துக்காக வேலைநீக்கம் வைக்கப் பட்டார் என்பதை ‘மெட்டா’ நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது வேலை இழப்பு குறித்து தனது பெற்றோரிடம் இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களை பார்க்கும் போது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தான் வேலை போனதை அவர்கள் அறிந்தால் இந்த வயதில் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்பதால் அவர்களிடம் இன்னும் நான் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை எனக்கு புதிய வேலை கிடைத்தவுடன் நான் அனைத்து உண்மைகளையும் அவர்களிடம் கூறுவேன் என்றும் அதுவரை ஒவ்வொரு நாளும் அவர்களின் முகங்களை பார்ப்பது, அவர்களிடம் உரையாடுவது ஆகியவை போலியாக இருக்கும் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளிடம் இன்னும் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கூறாமல் இருப்பதாக பலர் அவருடைய சமூக வலைதள பதிவின் கீழ் கமெண்ட்ஸ்களாக பதிவு செய்துள்ளனர். இப்படி ஒரு இக்கட்டான நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Trending

Exit mobile version