இந்தியா

இந்தியாவில் பெட்ரோல் விலை இதனால் தான் உயரவில்லை: மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை!

Published

on

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

5 மாநில தேர்தல் காரணமாக தான் பெட்ரோல் விலை உயரவில்லை என்றும் தேர்தல் முடிந்தவுடன் உயரும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் குறைந்தபட்சம் பெட்ரோல் விலை அதிகரிக்காமல் இருக்க வாய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு இந்தியா எந்தவித கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் ஐநா சபையிலும் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு கைமாறாக ரஷ்யா இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில் கச்சா எண்ணெயை சலுகை விலையில் விற்க முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவில் இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர வாய்ப்பே இல்லை என்றும் மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Trending

Exit mobile version