கிரிக்கெட்

கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. இந்தியா தோல்வி

Published

on

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் காயத்துடன் இருந்த ரோகித் சர்மா அதிரடியாக களம் இறங்கினார். அவர் களத்தில் இறங்கி பவுண்டரிகளும் சிக்சர்களுடன் அடித்ததால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 82 ரன்களும் அக்சர் படேல் 56 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து ரோகித் சர்மா வேறு வழியின்றி காயத்துடன் களம் இறங்கினார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அவர் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version