கிரிக்கெட்
அவரை தூக்குங்க.. இல்லை இருக்கட்டும்.. பிசிசிஐ மீட்டிங்கில் சலசலப்பு.. காரணமே கே.எல் ராகுல்தான்!

சென்னை; இந்திய அணியில் கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்று வந்துவிட்டாலே இந்தியா – ஆஸ்திரேலியா இடையே கடுமையான மோதல் இருக்கும். இரண்டு நாடுகளும் கடுமையாக அடித்துக்கொள்ளும். அதிலும் வரிசையாக 3வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வருகிறது.
இந்த முறையும் ஏற்கனவே கோப்பையை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. டெல்லி, நாக்பூர் போட்டிகளில் வென்ற நிலையில் நாளை இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் நடக்க உள்ளது.
இதில் கே எல் ராகுலை அணியில் சேர்ப்பது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் இடையே விவாதம் நடந்து உள்ளது. இந்த விவாதத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கே எல் ராகுலுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சில நிர்வாகிகள் அவரை நீக்க கூடாது என்று கூறி உள்ளனர். கே எல் ராகுல் மட்டும் பார்மில் இல்லை. டாப் ஆர்டரில் பலர் பார்ம் இழந்து உள்ளனர். கோலி கூடத்தான் சரியாக ஆடவில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டீர்களா? ராகுலை நீக்க கூடாது. வேண்டுமென்றால் அவரின் பேட்டிங் பொஷிஷனை மாற்றுங்கள். அவரை ஓப்பனிங் இறக்குவதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் இறக்குங்கள், என்று சிலர் வாதம் வைக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் கே எல் ராகுலுக்கு எதிராக சிலர் கடுமையாக கருத்து வைத்து உள்ளனர். அதில், கே . எல் ராகுல் மோசமான பார்மில் இருக்கிறார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ரன்கள். கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இவ்வளவு மோசமாக ஆடி இருக்கிறார்.
அப்படி இருக்கும் போது அவரை எப்படி எடுக்கலாம். இதனால் அவருக்கு பதில் கில்லிற்கு இடம் கொடுங்கள் என்று சிலர் வாதம் வைத்து வருகிறார்களாம். இதனால் பிசிசிஐ மீட்டிங்கில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.