வணிகம்

வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்.. இல்லை என்றால் என்ன ஆகும்?

Published

on

2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியினைச் செலுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும். கேரளா மக்களுக்கு மட்டும் வெள்ளப்பெருக்குக் காரணத்தினால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 ஆகும்.

வருமான வரியினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவே டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும்.

தனிநபர் ஒருவரின் ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது அவர்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதுவே 60 வயதுக்கு அதிகமாகவும் 80 வயதிற்குள்ளும் இருக்கும் போது 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ள போது வருமான வரி செலுத்த வேண்டும். 80 வயதுக்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய் வரை வரி விலக்கு உண்டு.

ஆன்லைன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் ஒரு முறை கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்த்துக்கொள்ளலாம். இதுவே ஆப்லைன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐடிஆர் 1 படிவத்தினைப் பூர்த்திச் செய்து பெங்களூருவில் உள்ள மத்திய நேரடி வரி வாரிய அலுவலகத்திற்குத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version