இந்தியா

இந்தியாவில் உள்ளது பாசிச, இந்து மேலாதிக்கவாத அரசு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசம்!

Published

on

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-வது பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து இது தொடர்பாக பேசி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதனை ஐநா வரை கொண்டு சென்றது பாகிஸ்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் நியூயார்க் டைம்ஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த இம்ரான் கான், இனி இந்தியாவுடன் பேசுவதில் அவசியமில்லை. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்காக நான் செய்த அனைத்து முயற்சியையும், திருப்திப்படுத்தும் முயற்சியாக அவர்கள் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். காஷ்மீரில் எட்டு மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை நடக்கப்போகிறது என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

இந்தியாவில் உள்ள ஒரு பாசிச மற்றும் இந்து மேலாதிக்கவாத அரசு பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரில், இஸ்லாமிய மக்களை ஒழிக்கவும், இந்துக்களுடன் இப்பகுதியை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. எங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த காஷ்மீரில் இந்தியா மோசமான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதற்கு பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Trending

Exit mobile version