சினிமா செய்திகள்

தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன்: இமான் முன்னாள் மனைவியின் காட்டமான பதிவு

Published

on

சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட டி இமான், இரண்டாவது மனைவி அமலியின் மகளை தனது மூன்றாவது மகள் என்று கூறிய நிலையில் தேவைப்பட்டால் அந்த மூன்றாவது மகளையும் பாதுகாப்பேன் என இமானின் முன்னாள் மனைவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இமானின் முன்னாள் மனைவி மோனிகா தனது சமூக வலைத்தளத்தில் இமானின் மறுமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் உங்களுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரை அதற்குள் எப்படி ஏமாற்ற முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

உங்களுடன் 12 வருடங்கள் வாழ்ந்த நான் ஒரு முட்டாள் என்பதை உணர்கிறே. கடந்த இரண்டு வருடமாக சொந்த மகளை கூட பார்க்காத நீங்கள் அவர்களுக்கு பதிலாக புதிதாக ஒரு மகளை தேர்ந்தெடுப்பது ஆச்சரியமாக உள்ளது. என் குழந்தைகளை உங்களிடமிருந்து நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் உங்கள் புது மகளையும் பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.

மறைந்த கலை இயக்குனர் உபால்டு என்பவரின் மகளான அமலி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட டி இமான் அவருடைய மகளை தனது மகளாக ஏற்றுக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக இமான் கூறிய நிலையில் அவரது முன்னாள் மனைவி பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version