தமிழ்நாடு

மனைவிக்கு குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ!

Published

on

தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதனையடுத்து சதீஷ்குமாரின் மனைவி கர்ப்பம் ஆனதை அடுத்து அவருக்கு நேற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பெண்ணின் வயதை ஆதார் அட்டை மூலம் சரி பார்த்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆகின்றது என்றும் பதினாறு வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று சந்தோஷத்துடன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வந்த சதீஷ்குமாரை 18 வயதுக்கு குறைவான சிறுமியை கர்ப்பமாக்கியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தனது மனைவியை திருமணம் செய்த போது அவரது வயது என்ன என்று தனக்கு தெரியாது என்றும் திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு 16 வயது என்று தெரியும் என்றும் சதீஷ்குமார் கூறினார் .

இருப்பினும் சதீஷ்குமாரை கீழ் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக ஆசைஆசையாக மிட்டாய் கொடுத்த கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

Trending

Exit mobile version