கிரிக்கெட்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த 14வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை, டெல்லி கேப்பிட்டஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 216 சிக்சர்கள் அடித்து, பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் மகேந்திர சிங் தோனி.
தோனியை தொடர்ந்து, 100 சிக்சர்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, யுசஃப் பதான், யுவராஜ் சிங், அம்பத்தி ராயடு, சஞ்சு சாம்சன், விரேந்திர ஷேவாக், ஷிக்கர் தவான், த்னேஷ் கார்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர்.


















