உலகம்
கொரோனா முதலில் இப்படித்தான் பரவியது… அமெரிக்க ஆய்வில் பகீர் தகவல்!

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்ன நடந்தது என்பதை அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

#image_title
கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கியது. அது படிப்படியாக அசுர வேகத்தில் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளையும், கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இதனால் உலகமே முடங்கிய சூழல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகே அவதிப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என அப்போதே குற்றம்சாட்டியது அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு. 2021-ஆம் ஆண்டு இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் வூகான் பரிசோதனை மையத்தில் இருந்துதான் முதன் முதலில் வைரஸ் பரவியது என கூறியது. ஆனால் அது எப்படி முதன் முதலில் பரவியது என்பது குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள், புலனாய்வு நிபுணர்கள் அடங்கிய அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வு பரிசோதனை மையங்களை கண்காணிக்கும் அமெரிக்க மின்சக்தி அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வூகானில் உள்ள பரிசோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது என உறுதியாக தெரிவித்துள்ளது.