சினிமா செய்திகள்
ஹிந்தி அர்ஜுன் ரெட்டி.. கபீர் சிங் டிரைலர் ரிலீஸ்!
சந்திப் வாங்கா இயக்கத்தில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கபீர் சிங் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான கபீர் சிங் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றது.
தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகம் ஆகும் படமாக வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால், தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மறுபடியும் ஆதித்ய வர்மா எனும் பெயரில் வேறு ஒரு இயக்குநரை கொண்டு அந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஹிந்தியில் இதுபோன்ற எந்தவொரு பிரச்னையும் இல்லாததால் கபீர் சிங் படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகிறது.


















