இந்தியா

HDFC சி.இ.ஓ பதவி மீண்டும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.. யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்?

Published

on

By

HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாக பதவி பெற்று அதன் பிறகு எம்டி மற்றும் சிஇஓ பணியிலும் அமர்ந்தார்.

1996 ஆம் ஆண்டு முதல் நிதித்துறை மேலாளராக சேர்ந்ததிலிருந்து அவர் படிப்படியாக வங்கியின் வளர்ச்சிக்காக தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார் என்பதும் நிதி வணிக தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் அவர் HDFC வங்கியில் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 33 வருட வங்கி அனுபவத்துடன் இருக்கும் ஜெகதீசன் தற்போது மேலும் 3 ஆண்டு காலத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக HDFC வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு பங்குதாரர்களின் ஒப்புதலையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

நேற்று இந்த வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சஷிதர் ஜெகதீசனை மீண்டும் நியமனம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

HDFC வங்கியில் சேர்வதற்கு முன்னர் ஜெகதீசன் டாய்ட்ஸ் வங்கியில் நிதி கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற அவர் பட்டய கணக்கிலும் பட்டம் பெற்றார் என்பதும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கி நிதியியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HDFC வங்கியின் வீட்டுக் கடன்களின் சீரான விநியோகத்தை எளிதாக்கியது இவர்தான் என்பதும் 68 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் கடன் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version