வேலைவாய்ப்பு
மனைவியைப் பிரிந்தாரா விஷ்ணு விஷால்: ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ட்வீட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ‘வெண்ணில கபடிக்குழு’ படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பிறகு, ‘ராட்சசன்’, ‘துரோகி’, ’கட்டாகுஸ்தி’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினி என்பவருடன் காதல் திருமணம் நடந்து பின்பு விவாகரத்து ஆனது.
அதன் பிறகு, விளையாட்டு வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் திருமணம் நடந்தது. மிக எளிமையான முறையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து, திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்திற்கு முன்பே கடுமையான மன அழுத்தம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த விஷணு விஷால் அதில் இருந்து மீண்டு வந்ததையும் வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், திடீரென நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் ட்வீட் ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘பரவாயில்லை! நான் மீண்டும் முயற்சி செய்தேன். நான் மீண்டும் தோற்றுவிட்டேன். நான் மீண்டும் கற்றுக்கொண்டுள்ளேன். கடைசி முறை அது என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால். இந்த ட்வீட்டை பதிவிட்டப் பிறகு அதை டெலிட்டும் செய்து விட்டார். ஒருவேளை, ஜூவாலா குட்டாவுடனான திருமணத்தில் ஏதேனும் பிரச்சனையா என ரசிகர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.