தமிழ்நாடு
எச் ராஜாவை கைது செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

பாஜகாவின் தேசிய செயலாளரான எச் ராஜா நீதி துறை மற்றும் காவல் துறையினை அவதூறாகப் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் பரவிப் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து எச் ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்டார். இதனை நிராகரித்த நீதிபதி எச் ராஜாவை கைது செய்ய முடியாது என்றும் வேண்டும் என்றால் அவதூறு வழக்கைத் தொடுக்கலாம் என்றும் அதற்கான நீதிமன்றத்தினை அனுகுமாறும் வழக்கறிஞர் சிவப்பிரகாசத்திற்கு அறிவுரை கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



















