சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷூடன் ஷிவாங்கி பாடிய பாடல் ரிலீஸ்!
Published
1 year agoon
By
Shiva
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ‘குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பாடிய பாடல் சற்று முன் வெளியான நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் தற்போது சில திரைப்படங்களில் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கௌதம் கார்த்திக் நடித்த ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை ஜிவி பிரகாஷ் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ’நீ என் உசுருக்குள்ள’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
கௌதம் கார்த்திக், சேரன், சரவணன், விக்னேஷ், டானியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், சிங்கம்புலி, சினேகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
You may like
-
டிசம்பர் 4ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. செம அப்டேட் வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழு
-
வானதியிடம் தோற்ற மொத்த காண்டையும் கமல் காட்டிவிட்டார்: ‘பத்தல பத்தல’ பாடல் குறித்து கஸ்தூரி
-
சியான் விக்ரமின் ‘கோப்ரா’: மாஸ் சிங்கிள் பாடல் ரிலீஸ்
-
காத்துவாக்குல ரெண்டு காதல்: செம எனர்ஜி பாடல் ரிலீஸ்
-
ராவம்மா ஏ ராவம்மா’: பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல்!
-
அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் ஆடிய சமந்தா: வைரல் வீடியோ