கிரிக்கெட்

55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

Published

on

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

குஜராத் அணி 207 ரன்கள்

குஜராத் அணியில் சாஹா, ஷுப்மன் கில் களமிறங்கினர். சாஹா 4 ரன்கள், ஹர்திக் 13 ரன்கள், விஜய் ஷங்கர் 19 ரன்கள் மற்றும் கில் அரைசதம் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் மில்லர் – மனோகர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியில் கலக்க, குஜராத் டைட்டன்ஸ் ஸ்கோர் எகிறியது. மனோகர் 42 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் மில்லர் – திவாதியா இணைந்து இமாலய சிக்சர்களை விளாச, குஜராத் அணி 200 ரன்களைத் தாண்டியது. மில்லர் 46 ரன் விளாசி அவுட்டானார். குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன் குவித்தது. மும்பை பந்துவீச்சில் சாவ்லா 2, அர்ஜுன், பெஹரன்டார்ப், மெரிடித், கார்த்திகேயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

குஜராத் வெற்றி

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மும்பை அணித் தரப்பில் வதேரா அதிகபட்சமாக 40 ரன்களை விளாசினார். குஜராத் பந்துவீச்சில் நூர் அகமது 3 விக்கெட், ரஷித்கான், மோகித் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Trending

Exit mobile version