சினிமா செய்திகள்

சிலம்பரசன் போல நான் மாற ஆசைப்படுகிறேன்: கெளதம் கார்த்திக்

Published

on

சிலம்பரசன் நடித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில் நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “‘பத்து தல’ திிரைப்படம் மிகவும் முக்கியமான ஒரு படம். படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நிச்சயம் படம் வெற்றியடைய வேண்டும்.

என்னை நம்பி மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா சாருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் சார் அதை அற்புதமாக செய்திருக்கிறார்.

அஜய், சாண்டி, பிருந்தா மாஸ்டருடன் வேலை பார்த்தது எனக்கு ‘கடல்’ படத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. கெளதம் மேனன் சாருடன் இந்தப் படத்தில் எனக்கு காட்சிகள் இல்லாதது வருத்தம்தான்.

அறிமுக நடிகராக எனக்கு முதல் படத்தில் ரஹ்மான் சாருடைய இசை மிகப்பெரிய கனவாக இருந்தது. இப்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறேன். படத்தின் பாடல்களை கேட்கும் பொழுது சில இடங்களில் கண் கலங்கினேன். அடுத்து எஸ் டி ஆர் அண்ணன்! முதன்முதலில் அவரை 2013 இல் லண்டனில் தான் சந்தித்தேன்.

என்னை அவருக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவரே வந்து என்னிடம் பேசி லண்டனை முழுவதும் சுற்றிக்காட்டி பாதுகாப்பாக கூட்டிச் சென்றார். அப்போதே அவர் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. அப்பொழுது அவர் என்னிடம் ஆன்மீக பயணம் குறித்து சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கு அது சரியாக புரியவில்லை. இப்பொழுது அதை பின்பற்றி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரமிப்பை தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வந்து நின்றாலே அத்தனை தலையும் அவரை தான் திரும்பி பார்க்கும். கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டால் அவரது தலையில் இருந்து கால் வரை அத்தனையும் நடிக்கும். அவர் போல ஒரு நடிகராக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஏ.ஜி.ஆர்ரின் பவரை நீங்கள் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வந்து பார்த்து ரசியுங்கள்”.

Trending

Exit mobile version