வேலைவாய்ப்பு

தமிழக ஆளுநர் மாளிகையில் வேலை!

Published

on

சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியிடங்கள் 07 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 07

வேலை: Personal Clerk

காலியிடங்கள்: 02

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: பிஏ, பி.எஸ்சி, பி.காம் இளங்கலை படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Driver

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்த்தியுடன் இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Office Assistant

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Secretary to Governor & Comptroller, Governor’s Secretariat, Governor’s Household Office, Raj Bhavan, Chennai – 600 022

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.06.2019

Trending

Exit mobile version