சினிமா செய்திகள்

தோனி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பு: மீண்டும் வெளியாகும் தோனியின் படம்!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்த ஐபிஎல் சீசன் கடைசி சீசனாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் சென்னை மட்டுமின்றி, சென்னை அணி விளையாடும் பிற மைதானங்களில் கூட, சென்னை அணியின் ரசிகர்கள் ஒன்றுகூடி தோனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ். தோனி திரைப்படம்

தோனியின் தீவிர ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பு என்னவெனில் எம்.எஸ். தோனி (MS Dhoni The Untold Story) திரைப்படம் வருகின்ற மே மாதம் 12 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை ரிலீசாக இருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் நீரஜ் பாண்டே இயக்கத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அசத்தலான நடிப்பில் வெளியான MS Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில், தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற 12 ஆம் தேதி எம்எஸ் தோனி படத்தை ரீ-ரிலிஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version