உலகம்

வழிமாறி சென்ற ஒலிம்பிக் வீரர், உதவிய ஜப்பான் இளம்பெண்: அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

Published

on

By

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர் தனக்கு உதவி செய்த ஜப்பான் இளம்பெண் ஒருவரை நேரில் சந்தித்து செய்த காரியத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒலிம்பிக் ஆடவர் 110 மீட்டர் தடை போட்டியின் அரையிறுதி போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜமைக்கா வீரர் Hansle Parchment என்பவர் ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்லும் போது வழிதவறி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அவரிடம் அங்கிருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்வதற்கு பணமும் இல்லை.

இந்த நிலையில் தன்னார்வல இளம்பெண் ஒருவர் அவருடைய நிலைமை கண்டு உடனடியாக அவருக்கு உதவி செய்து, ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்ல டாக்ஸி ஏற்பாடு செய்து அதற்குரிய கட்டணத்தையும் அவரே செலுத்தி ஒலிம்பிக் போட்டியில் சரியான நேரத்தில் கலந்து கொள்வதற்கு உதவி செய்தார்.

இந்த நிலையில் 110 மீட்டர் ஆடவர் தடகள போட்டியில் தங்கம் வென்ற Hansle Parchment, பதக்கத்தை பெற்றவுடன் நேராக அந்த பெண்ணை தேடி சென்றார். அவரிடம் உதவி செய்ததற்கு நன்றி என்று கூறிவிட்டு தான் பெற்ற தங்கப் பதக்கத்தையும் அவரிடம் காண்பித்தார். அதுமட்டுமின்றி தனக்காக டாக்சிக்கு கொடுத்த பணத்தையும் அவர் திருப்பிக் கொடுத்து, தன்னுடைய ஞாபமாக ஜெர்ஸி ஒன்றையும் அந்த இளம்பெண்ணுக்கு பரிசளித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் இடம் மாறிச் சென்ற போது உரிய நேரத்தில் உதவியது ஜப்பான் பெண்ணை தேடி சென்று தங்கப்பதக்கத்தை காண்பித்த ஜமைக்கா வீரர் HansleParchment அவர்களின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Why Gold Medalist Hansle Parchment Hunted Down A Volunteer In Tokyo After Olympic Triumph

Trending

Exit mobile version