இந்தியா
கணவரின் செல்போனில் ஆண்களின் நிர்வாணப்படம்.. அதிர்ச்சி அடைந்த மனைவியின் அதிரடி நடவடிக்கை
Published
1 month agoon
By
Shiva
கணவனின் செல்போனில் ஆண்களின் நிர்வாண படங்கள் இருப்பதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளாக தனது கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த மனைவி ஒரு நாள் தற்செயலாக தனது கணவரின் மொபைல் போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் தனது கணவர் பிற ஆண்களுடன் நிர்வாணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து தனது கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது மனைவிக்கு புரிய வந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மனைவி இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி அதிரடி தீர்ப்பு அறிவித்துள்ளார். கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி மாதம் 15 ஆயிரம் ரூபாய் அந்தப்பெண்ணின் செலவுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து கணவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய மேல் கோர்ட்டிலும் அதே தொகையை வழங்க வேண்டும் என கீழ் கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தது. இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
செல்பி எடுத்த ரசிகர்.. கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்த பாலிவுட் நடிகர்.. இது அதுல்ல?
-
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்
-
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த டாக்டர்.. செஞ்சுரி அடிக்க போவதாக பேட்டி!
-
கர்ப்பமாக இருந்ததால் வேலையில் இருந்து நீக்கம்.. இழப்பீடு மட்டும் இத்தனை லட்சமா?
-
தவறுதலாக வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1.28 கோடி பணம்.. ஜெயிலுக்கு அனுப்பிய துபாய் நீதிமன்றம்!
-
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா காண்டம் விளம்பரம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!