சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் உறுதி: ஹாட்ஸ்டாரே சொல்லிருச்சு!

Published

on

பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிகழ்ச்சி ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளப் போவதாக ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதில் ஒருசில போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்தது என்பது குறிபிடத்தக்கது.

இதுவரை வந்த தகவலின்படி வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ்.
ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு போட்டியாளர் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு ’நாமினேஷன் என்றால் என்ன’ என்ற ஒரு கேள்வியை பிக்பாஸ் இடமே கேட்டார்.

அந்த வசனத்தை பதிவு செய்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக மறைமுகமாக ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. அப்படி என்றால் கஞ்சா கருப்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version