ஆரோக்கியம்

மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள் குணமாக்கு கீழாநெல்லி!

Published

on

கீழாநெல்லி:

இதற்கு கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. ரத்தசோகையைச் சரிசெய்யும்.

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரைக் குளிர்ச்சித் தன்மை உடையது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளைப்படுதல் தீர்….

 

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை என இரு வேளை குடிக்க வெள்ளைப்படுதல் தீரும்.

உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள் தீர்….

கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை மாலை என 3 நாட்கள் குடிக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். மேலும், விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள் தீர்…

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் ‘பி’ மற்றும் ‘சி’ ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. இதற்குச் சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.

கீழாநெல்லியை 50 கிராம் எடுத்து, அதை 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

மருந்து சாப்பிடும் மூன்று நாட்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாட்கள் சாப்பிடச் சிறுநீர் தொடர்க்கான நோய்கள் குணமாகும்.

Trending

Exit mobile version