தமிழ்நாடு
நீ பிஜேபியா இரு… எந்த பயலா வேணும்னாலும் இரு… எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர்!

நீ பிஜேபியா இரு… எந்த பயலா வேணாலும் இரு… எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல… என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பாஜக நிர்வாகி காளிராஜுக்கு டோஸ் விட்ட ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

#image_title
தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான வார்த்தை மோதல் ஓய்ந்து இருந்தாலும் அவ்வப்போது எட்டிப்பார்த்து இரு தரப்பினரையும் பரபரப்பாகவே வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் எட்டயபுரம் மண்டலச் செயலாளர் காளிராஜ், முன்னாள் அமைச்சர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காளிராஜிடம் மிக கடுமையாக பேசினார் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன். அந்த ஆடியோவில், பாஜக நிர்வாகி காளிராஜ் பாஜக பற்றி ஏன் அண்ணாச்சி இப்படி பேசுறீங்க எனக் கேட்கிறார்.
அதற்கு சண்முகநாதன், நீ பிஜேபியா இரு… எந்த பயலா வேணும்னாலும் இரு… அது பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்கள் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எடப்பாடிக்கு தான் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளின் முழு ஆதரவு இருக்கிறது. இது தெரியாமல் பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் எல்லாம் எங்களிடம் வேண்டாம் என எச்சரித்தார். இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.