இந்தியா

கிரிப்டோவில் முதலீடு செய்யும் ஏராளமான இளைஞர்கள்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை..!

Published

on

இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்ற வகையில் பலர் முதலீடு செய்தனர். ஆனால் சமீபத்தில் கிரிப்டோவின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்ததை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதாகவும் ஒரு சிலர் நல்ல பயன்களை பெற்றிருந்தாலும் பலர் கிரிப்டோவில் முதலீடு செய்து திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரை சேர்ந்த வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ராகுல் என்பவர் ரூ.5000 முதலீடு செய்து ஒரு சில மாதங்களில் ரூபாய் ஒரு லட்சம் லாபம் பெற்றதாகவும் இதனை அடுத்து அவர் தனது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களையும் கிரிப்டோவில் முதலீடு செய்ய தூண்டியதாகவும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ராகுலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலீடு செய்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை கிரிப்டோ சந்தித்தது என்றும் ஆதலால் அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது ராகுல் கதை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்து தங்களுடைய பணத்தையும் தங்கள் பெற்றோர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில் கிரிப்டோவில் முதலில் செய்ய வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

#image_title

கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது குறித்து விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் விரைவில் பாராளுமன்றத்தில் இது குறித்த மசோதா நிறைவேறும் என்றும் கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்பதை மக்களை எச்சரிக்கும் வகையில் பிரச்சாரமாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். ஒரு சில வரைமுறைகளை வகுத்து விரைவில் பாராளுமன்றத்தில் கிரிப்டோவுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அதுவரை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோவில் முதலில் செய்தால் ஒரு சில வாரங்களில் பல மடங்கு லாபம் பெறலாம் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது ஆபத்தானதாக முடியும் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version