இந்தியா
சரத்பவாரை அடுத்து இன்னொரு தலைவரும் போட்டியிட மறுப்பு: என்ன ஆச்சு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்?

அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட சரத்பவார் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது இன்னொரு அரசியல் தலைவரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதை அடுத்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்தநிலையில் குடியரசுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார் சமீபத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பருப்பு அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார்.
தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பாஜக தேர்வு செய்யும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்து மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயிக்க வைக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.