சினிமா

பாலைவனத்தில் அரபிக்குத்து பாட்டுக்கு செம டேன்ஸ்…. வைரல் வீடியோ…

Published

on

டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. வீடியோ 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

beast

ஒருபக்கம் இப்பாடல் உலக அளவில் ரீச் ஆகியுள்ளது. எனவே, பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உண்மையிலேயே அரபு நாட்டில் உள்ள பாலைவனத்தில் சிலர் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version