சினிமா
பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், நித்யானந்தாவை கலாய்த்து டப் ஸ்மாஷ் வீடியோ
நித்யானந்தாவை கலாய்த்து டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுக் கலக்கியுள்ளார். தமிழ்த் திரைப்பட உலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆன்மிகக் குரு என்று தன்னை அறிவித்துக் கொண்டார்.
இவர் தனியார் தமிழ் டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா சங்கர், அதன் பின்னர் டிவி நாடகங்களில் நடித்து வந்தார். சின்னதிரையில் தோன்றி வெள்ளித்திரை நடிகையாக வலம் வரும் பவானி சங்கர் சமீபத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இவர் நாயகியாக அறிமுகமான மேயாத மான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதர்வாவுடன் நடித்த குருதியாட்டம் திரைக்கு வரவுள்ளது.
நித்யானந்தாவை கிண்டல் செய்து டப் ஸ்மாஷ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் மட்டும் 2.2 லட்சம் பேர் பார்த்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிவியாக இருக்கும் பிரியா பவானியின் இந்த வீடியோவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.








