Connect with us

தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில் கட்சி தலைவர்கள்.. பரபரப்பான தகவல்!

Published

on

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேரா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

இதனை அடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரபலங்கள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். முதல் கட்டமாக திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால் அக்கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிகே வாசன் திடீரென அதிமுகவுக்கு இந்த தொகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அதிமுக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக கட்சியின் தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதே போல் தேமுதிக மற்றும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் விரைவில் இது குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது ’திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம், அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.. ஜனவரி 27ஆம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும். நான் கூட போட்டியிட வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அண்ணாமலை, சீமான், டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் போட்டியிடும் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?