பர்சனல் பைனான்ஸ்

கோவிட்-19 எதிரொலி பிஎப் வட்டி தொகையை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்க முடிவு!

Published

on

கோவிட்-19 எதிரொலியாக 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் நிதி வட்டி தொகையை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்க வருங்கால வைப்பு நிதியம் முடிவு செய்துள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது.

2019-2020 நிதியாண்டில் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு 8.50 சதவீத வட்டி விகிதம் வழங்க உள்ளதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 8.5 சதவீத வட்டி விகிதமும், இரண்டாம் கட்டமாக 0.35 சதவீத வட்டி விகிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பிஎப் கணக்கில் 8.15 சதவீத வட்டி விகித தொகை விரைவில் வரவு வைக்கப்படும். மீதம் உள்ள 0.35 சதவீத வட்டி விகித தொகை டிசம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது.

பிஎப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சில முதலீடுகளின் பணத்தை இடையில் எடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே பிஎப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் இரண்டு தவணையாகப் பிரித்து வழங்குவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version