Connect with us

வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 06. எம்டிஎஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினியர், தளப் பொறியாளர், திட்ட மேலாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. எம்டிஎஸ் – 02
2. எலக்ட்ரிக்கல் என்ஜினியர் – 01
3. தளப் பொறியாளர் – 02
4. திட்ட மேலாளர் – 01

கல்வித்தகுதி: எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணு பொறியியல், சிவில் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்திச் செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Assistant General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 500 மற்ற அனைத்துப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விபரங்களை அறிந்துகொள்ள www.becil.com அல்லது http://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf-4979a73effee49470cd6d73717b20344.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.05.2019

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?