இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலை!

இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலை!

இஎஸ்ஐசி நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள மாநில இஎஸ்ஐ நிறுவனத்தில் 1934 ஸ்டெனோகிராபர் மற்றும் மேல்நிலை கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்) வேலைக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். இதில் தமிழகத்திற்கு 131 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த காலியிடங்கள்:151

வேலை: STENOGRAPHER – 20

வேலை: UPPER DIVISION CLERK – 131

வயது: 15.04.2019 தேதியின்படி 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் மற்றும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருப்பவர்கள் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கும், பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2019

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com