Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக மின்வாரியத்தில் வேலை!

Published

on

தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட காலியிடங்கள் 600 உள்ளது. இதில் உதவிப் பொறியாளா்கள் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 600

வேலை: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE))

துறைவாரியான காலியிடங்கள்:
1. மின்னியல் (Electrical) – 400
2. இயந்திரவியல் (Mechanical) – 125
3. கட்டடவியல் (Civil) – 75

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரா்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களும், ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்தவா்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், எஸ்சி, எஸ்டி, விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சமாக 35க்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.39,800 – 1,26,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவினர் ரூ.1000, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தோ்வு, கணினி அடிப்படையிலான தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியன குறித்து www.tangedco.gov.in எனும் வெளியிடப்படும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf ZVdJ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2020

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?