உலகம்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பில் விழுந்த மிகப் பெரிய ஓட்டை!

Published

on

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலன் மஸ்க், அக்டோபர் 28-ம் தேதி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து எலன் மஸ்கின் செல்வ மதிப்பு 9 பில்லியன் டாலர் சரிந்து 204 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

2022-ம் ஆண்டிலிருந்து எலன் மஸ்கின் செல்வ மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது. இருந்தாலும் எலன் மஸ்க் தான் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார்.

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்ட் செல்வ மதிப்பு 65 பில்லியன் டாலர் ஆகும்.

எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடித்து வாங்கியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தாங்களாகவே ராஜினாமாவும் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் இனி தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், வாரம் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் விடுமுறை கிடையாது என்றும், விருப்பம் இல்லை என்றால் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டெஸ்லாவிலிருந்து 50 ஊழியர்களை டிவிட்டர் பணியமர்த்தியுள்ளார் எலன் மஸ்க், இவர்கள் மூலம் டிவிட்டரை லாபகரமான, அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதை இலக்காக எலன் மஸ்க் வைத்துள்ளார்.

Trending

Exit mobile version