இந்தியா
தேர்தல் தேதி மாற்றப்படுமா? அறிவித்த அடுத்த நாளே எழுந்த சர்ச்சைகள்!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஆனால், 18-ம் தேதி மதுரையில் சித்திரை தேரோட்டம் திருவிழாவும், 19-ம் தேதி காலை வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவிற்கு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கல் திரள்வார்கள்.
இதனால் வாக்குப் பதிவு சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே மதுரையில் மட்டும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் மே மாதம் 6ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை ரம்ஜான் நோம்பு உள்ளது. எனவே இந்தக் காலகட்டத்தில் தேர்தலை தங்களது மாநிலங்களில் நடத்துவது சரியல்ல என்று தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















