தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் உத்தரவால் ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு!

Published

on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில், வாக்களர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பலரின் பெயர்கள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள், தொகுதியை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுமுறை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பக்கூடிய விரிவான அறிக்கையை தலைமை அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கிறார்.

Trending

Exit mobile version