தமிழ்நாடு
துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார்: வீடியோ எடுத்து சம்பவம் செய்த அமமுக!
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கினர்.
#image_title
சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஆத்திரமடைந்து, அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்தார்.
மதுரை விமான நிலையத்தில் மிஸ்டர் @EPSTamilNadu க்கு கொடுக்கப்பட்ட தரமான வரவேற்பு சம்பவம்ம்ம்ம்…
யார்ரா அந்த செல்லம்ம்ம்ம்ம்ம்.
மானஸ்த்தன்ய்யா… pic.twitter.com/O9XMIcmj5v
— M.Sakthivel Rajan (@MaduraiMSRajan) March 11, 2023
முன்னதாக அந்த வீடியோவில், எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என பேசினார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் அவரை அதிமுகவினர் தாக்கினர். இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததின் பேரில் எடப்பாடி பழனிசாமி உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.