தமிழ்நாடு

டிடிவி தினகரன் கிட்ட போயிடுவீங்களா? நேர்காணலில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

Published

on

அதிமுக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.

இந்த நேர்காணலில் அதிகமாக கேள்வி கேட்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதானாம். கட்சியில் எப்போதில் இருந்து உறுப்பினர்? ஜெயலலிதா பிரியும்போது ஜெயலலிதா பக்கம் இருந்தீர்களா? ஜானகி பக்கம் இருந்தீர்களா? 2006 -11 திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக நடத்திய போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறீர்களா? என பல கேள்விகளை கேட்டுள்ளார் எடப்பாடி.

தொடர்ந்து தற்போது நடக்கும் தனது ஆட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கேட்கிறார். இந்த நேர்காணலில் முக்கியமான கேள்வியாக எடப்பாடி கேட்பது, நீங்கள் சமீபத்துல டிடிவி தினகரன் கிட்ட போனீங்களா? இப்ப உங்களுக்கு சீட் கொடுக்கலைன்னா அவர்கிட்ட போயிடுவீங்களா? என்ற கேள்வியை தான் என தகவல்கள் கிடைத்துள்ளது.

Trending

Exit mobile version